அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0 4399

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்புடன் தனிமையில் இருப்பதுடன், சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 230க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாகத் தங்கியிருக்குமாறும், சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. விசா நீட்டிப்பு தொடர்பாக, யு.எஸ்.சி.ஐ.எஸ் வலைத்தளத்தைப் பார்க்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments