சீனாவில் 2வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

0 3612

கொரானாவின் பிறப்பிடமான ஊகான் உட்பட சீனா முழுவதுமே 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஊகான் நகரில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 50,005 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சீன அரசின் தீவிர நடவடிக்கைகளால் ஊகான் நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2-வது நாளாக இங்கு புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை.

ஊகான் மட்டுமன்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வருபவர்களால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 39 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளானதால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments