கேரளாவில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியதாகத் தகவல்

0 3261

கேரளாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

காசர்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 225 பேர் மருத்துவமனையில் மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்ப்பட்டு வருவதாகக் கூறினார்.

கொரோனாவின் தீவிரத்தை சிலர் உணரவில்லை என்று கூறிய பினராயி விஜயன், அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய அவர், மாநில பேருந்து சேவை, கொச்சி மெட்ரோ மற்றும் பிற சேவைகள் நாளை மூடப்படும் என்றும் அவசர சேவைகள் மட்டுமே இருக்கும், என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments