அறிகுறி இல்லாமலும் பரவும் கொரோனா..!

0 15025

கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், லேசான அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்தும் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லேசான அறிகுறிகள் என்றாலும், காய்ச்சல், இருமல், சிலவேளை நிமோனியாவும் காணப்படும். இவர்கள் மிக விரைவாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

தொற்று வராமல் தவிர்க்கும் தடுப்பு நடவடிக்கையாக ஒருவரிடம் இருந்து ஒருவர் குறைந்தது 6 அடி தூரம் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமக்கு தொற்று ஏற்படாமல் தடுப்பதன் மூலம் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க முடியும். நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள வயதானவர்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்திட இயலும்.

சீனாவில் தொற்று பாதித்த 44 ஆயிரத்து 672 பேரில் 81 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டன. 13 புள்ளி 8 சதவிகிதம் பேருக்கு தீவிர அறிகுறிகளும், 4 புள்ளி 7 சதவிகிதம் பேருக்கு மிகத் தீவிரமான அறிகுறிகளும் காணப்பட்டன. இந்த 4 புள்ளி 7 சதவிகதம் பேரும் மரணத்தை தழுவினர்.

இந்த நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்ற ஆய்வை சீன நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்துகின்றனர். மனித சமூகத்தில் தீவிரமாக ஊடுருவும் நோக்கில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றங்களுடன் புதிய வடிவில் உருவெடுக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments