சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகக் குழுக்கள் அமைப்பு

0 5176

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக மருத்துவர்கள் அடங்கிய விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மேற்பார்வையில், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் பி.வி. தனபால், பொதுமருத்துவத்துறைத் தலைவர் சுரேஷ் கண்ணா உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மேற்பார்வையில் மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் சுகாதாரத்துறைத் துணை இயக்குநர் மேற்பார்வையில் பத்துப்பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments