முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் அடைப்பு

0 1198

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை, புனே, பிம்ப்ரி சிஞ்வாட், நாக்பூர் ஆகிய நகரங்களில் அனைத்து அலுவலகங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்த நகரங்களில் அத்தியாவசிய பொருள்களைத் தவிர இதர அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அலுவலகங்களை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பணியாளர்களின் ஊதியத்தில் கை வைக்கவோ,  முடக்கவோ கூடாது என்று நிறுவன உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது இடங்களில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக கூடினால், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்கள்  25 சதவிகித ஆஜருடன் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மாநிலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments