கொரோனா தடுப்பு பணி : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை

0 2383

கொடிய கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பணிகளையும் முடுக்கி விடுமாறு, மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திரமோடி, மாலையில் ஆலோசனை நடத்தினார். ( Gfx - In ) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு பணியில், மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி, அடுத்து எடுக்க வேண்டிய பணிகள் குறித்து, அறிவுறுத்தினார். கொரோனா பாதிப்பு குறித்த  விவரங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து மாநிலங்களிலும் மக்கள், விழிப்புடனும் உஷாராகவும் இருக்க ,தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, மாநில முதலமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments