கிளினிக்கில் நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் பதுக்கிய மருத்துவர் பறிமுதல்

0 1575

கும்பகோணம் அருகே கிளினிக்கில் பதுக்கிய நவீன துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்து மருத்துவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

குறிச்சி கோவிலில் நடந்த சிலை கொள்ளை வழக்கில், சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கள்ளத்துப்பாக்கி வாங்கி விற்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதையடுத்து சோழபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமாரின் கிளினிக்கில் சோதனை நடத்தி அங்கு பதுக்கி இருந்த நவீன ரக பிஸ்டல் மற்றும் ரிவால்வருடன், ஏராளமான தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ராம்குமாரும், அவருக்கு உதவியதாக நாம்தமிழர் கட்சியைச்சேர்ந்த அரவிந்த் என்பவரும் கைதானார்கள்.

துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற ராம்குமார், சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தி, வெளிநபர்களுக்கும் விற்றதாக தெரியவந்துள்ளது. இதில் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதுடன், இவற்றை எங்கிருந்து வாங்கினர், யார்-யாருக்கு விற்றனர் என தீவிர விசாரணை நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments