கிரிமினல்களை மட்டுமல்ல... கிருமிகளையும் அழிக்கும் காவல்துறை

0 2239

காவல் துறையில் பணிபுரியும் மருந்தியல், வேதியியல் படித்த காவலர்களுக்கு பயிற்சி அளித்து, சானிடைசர் எனும் கிருமி நாசினிகளை தயாரித்து வழங்கும் பணியினை சென்னை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சானிடைசர்களை வாங்கி குவிப்பதால், மருந்துகடைகளில் போதுமான கையிருப்பு இல்லை. அதே வேளையில் சானிடைசர்களின் விலையும் அதிகமாகிவிட்டது.

இந்த நிலையில் சானிடைசர் தட்டுப்பாட்டினை தவிர்க்கும் வகையில், குறைந்தபட்சம் தங்களுக்கு தேவையான சானிடைசர்களையாவது தாங்களே தயாரித்துக் கொள்ள காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணி புரியும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய படிப்பில் மருந்தியல் படித்தவர்கள் ((Pharmacy)), வேதியியல் படித்தவர்களை பட்டியலிட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

வேதியியல் நிபுணர்கள் உதவியுடன் வேதியியல், மருத்தியியல் படித்த காவலர்களுக்கு போதுமான பயிற்சியளிக்கப்பட்டு சானிடைசர்கள் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, காவலர் குடியிருப்புகளில் காவலர்களே ஸ்பிரேயர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.

கூடுதலாக சானிடைசர்களை தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டமிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு வழங்குவது தான் காவலர்களின் பணி என இல்லாமல், தற்போதைய சூழலுக்கு தேவையானவற்றை உருவாக்கி தொற்று நோயில் இருந்து காப்பதும் காவல் துறையின் கடமை என்கின்றனர் அந்த அதிகாரிகள்.

கிரிமினல்களை பிடிப்பதோடு மட்டுமல்லாமல் கிருமிகளை அழிக்கும் பணியிலும் இறங்கியுள்ள காவல் துறையினரின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments