கொரோனா குறித்த தமிழக அரசு விழிப்புணர்வு

0 961

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் டெலகிராமில் குழு துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மும்முரம் காட்டி வருகிறது.

விளம்பர படங்கள், துண்டு பிரசுரங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டெலகிராமிலும் TN_Together_AgainstCorona எனும் தலைப்பில் குழு ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

அதில் கொரோனா பரவும் முறை, பாதுகாப்பு வழிமுறைகள்,  செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை என்பன உள்ளிட்டவை குறித்து புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments