பட்டாசுகளில் உராய்வு.. இரண்டு அறைகள் தரைமட்டம்.. 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

0 5324

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

சாத்தூரை அடுத்த சிப்பிப்பாறை என்ற கிராமத்தில்  செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இன்று அந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிற்பகலுக்குப் பின் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. நெருப்பு அடுத்தடுத்து பட்டாசுகளில் பரவி வெடித்த நிலையில் ஆலையின் 2 அறைகள் தரைமட்டமாயின. 

இந்த வெடி விபத்தில் 3 பெண்கள், 3 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 6 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆலைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments