கொரோனா எதிரொலி: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பணிகள் ஒத்திவைப்பு

0 441

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான பணிகள் வரும் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 20ம் தேதியான இன்று அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நிகழ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, வார்டு மறுவரையரை இறுதிகட்ட பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வார்டு மறுவரையறை தொடர்பான அரசாணையும், வெளியாவதற்கு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments