கொரோனா தொற்று குறித்த வாட்ஸ்ஆப் எண் வெளியிட்ட மத்திய அரசு

0 2451

 கொரோனா தொற்று குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களுக்கு லேட்டஸ்ட் தகவல்களை அளிக்கவும், மத்திய அரசு, வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் சாட்போட்டுக்கு MyGov Corona Helpdesk என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கொரோனா குறித்த அதிகாரப்பூர்வ அரசுத் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் 9013151515 என்ற எண்ணை தங்களது செல்போன் கான்டாக்ட்ஸ் பட்டியலில் சேர்த்துக் கொண்டு ஒரு குறுந்தகவலை அனுப்பினால் போதுமானது.

இந்த வாட்ஸ்ஆப் வாயிலாக கொரோனா தாக்கத்தில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட அறிவுரைகளும் மக்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  

 whatsapp : 9013151515

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments