யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்

0 6098

கொரோனா பற்றிய பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருந்தும் கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன, குறிப்பாக கொரோனா வைரஸ் தங்களை எப்படி தாக்கும் சாதாரண காய்ச்சலும், சளியும் கொரோனாவாக இருக்குமா என மக்களுக்கு தொடர் சந்தேகங்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் யாரெல்லாம் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம் என்பது மக்களுக்கு வரும் சந்தேகங்களில் முதன்மையானது அது குறித்து இப்போது பார்க்கலாம். 

image

சீனாவின் வூகான் நகரத்தில் உருவானா கொரோனா வைரஸ், அங்கு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணக்களுக்காக சென்ற மக்களுக்கும் பரவியது. தங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியாமல் அவர்களின் சொந்த நாடுகளுக்கு சென்ற மக்கள் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவியது.  

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தங்களையும் தாக்குமா  என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளவர்கள் தான். எனவே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்க்காக தான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே புதிதாக ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் உருவாகாது என்பதால், மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் உறவினர்களோ, உங்கள் நண்பர்களோ கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் அவர்களிடமிருந்து மற்றவருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை நீங்கள் அப்படி வந்தவர்களிடம் தொடர்பில் இருந்து, உங்களுக்கு தொடர்காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

image

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவம் அளிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தாமதப்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

குறிப்பாக 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு நோய் தாக்கும் அபாயாம் அதிகமாக இருப்பதால் வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடமிருந்து கொரோனா பரவும் என்பதாலும், புதிதாக வைரஸ் உருவாகாது என்பதாலும்  கொரோனா பற்றிய தேவையில்லாத வதந்திகளை நம்பி பயப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாது கொரோனா இன்னும் சமூகதொற்றாக மாறவில்லை என்பதால் அனைவரையும் கொரொனா தாக்கும் என அச்சப்பட தேவையில்லை.

image

இருந்தாலும் கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அரசு மற்றும் மருத்துவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம். அதன்படி அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகத்தை அடிக்கடி கைகளால் தொடாமல் இருத்தல், இருமும் போதும் தும்மும் போதும் கைகுட்டையை பயன்படுத்த வேண்டும்.

image

மேலும் பிறரிடமிருந்து வைரஸ் பரவுவதை தடுக்க முகமூடிகள் அணிதல் என தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு எடுக்கக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமால் பாதுகாப்பாக இருக்கலாம்.   

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments