கொரோனாவால் இந்தியாவில் குறைவான பாதிப்பே !

0 916

உலகில் கொரோனா வைரஸ் மிகவும் குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது திகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேருக்கு முன்பு பாதிப்பு கண்டறியப்பட்ட போதிலும், தற்போது அந்நாட்டில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 20 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். ஐரோப்பிய நாடுகள், அராபிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

சார்ஸ் (SARS) வைரஸ் பரவியபோது கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை சிறப்பான நடவடிக்கையை எடுத்ததால், அங்கு தற்போது பெரும் பாதிப்பில்லை. தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments