கொரோனா வைரஸ் அடுத்த மாதம் அதிகம் பரவ வாய்ப்பு-மகாராஷ்டிர அமைச்சர் அதிர்ச்சி தகவல்

0 669

கொரோனா வைரஸ் அடுத்த மாதத்தில் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அழைத்து வரப்பட்ட பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா எல்லைகள் மூடப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசும் அதைதான் செய்ய விரும்புகிறது என்றார். கொரோனா நிலவரத்தில் அரசின் ஆலோசனைகளை மக்கள் மீறினால், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் எல்லைகள் மூடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments