கொரோனா பாதிப்பு-கேரள அரசு ரூ 20,000 கோடி நிதி ஒதுக்கீடு

0 1431

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து ,பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க கேரள அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 25 பேருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மூன்று பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கவும் , வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் , ஓய்வூதியம் பெறுவோருக்கு முன்கூட்டியே இரண்டு மாத ஓய்வூதியம் வழங்கவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments