120 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை நிறுத்தம்

0 5361

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 120 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டன.

வழக்கமான பூஜைகளை அர்ச்சகர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார், கோதண்டராமர் கோவில்களிலும் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு நிலைமையை பொருத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1892 ஆம் ஆண்டு 2 நாட்கள் மட்டும் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments