கொரோனா சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு

0 138337

கொரோனாவுக்கான சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், மலேரியா மற்றும் ஆர்த்ரிடிஸ்  தடுப்பு மருந்தான குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இம்மருந்தானது பிற நோய்களுக்கு ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ளதால், நோயாளிகள் யாருக்கும் இம்மருந்தால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

குளோரோகுயின் மருந்தை பரவலாக கிடைக்கவைப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments