கொரோனா உயிரிழப்பு.. சீனாவை விஞ்சியது இத்தாலி..!

0 13234

கொரோனாவின் தாயகமாக கருதப்படும் சீனாவில் அந்நோயால் உயிரிழந்தோரைவிட இத்தாலியில் அந்நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரை மையமாக கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை விளைவித்துவருகிறது.

ஈவு இரக்கமற்ற கொரோனா, உலகம் முழுக்க இதுவரை 10 ஆயிரம் உயிர்களைக் குடித்துள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு சீனாவிலேயே அதிகமானோர் உயிரிழந்துவந்தனர். தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், பலரும் எதிர்பார்க்காத இத்தாலியில், கொரோனாவின் கொடூரம் உச்சகட்டமாக உள்ளது.

அந்த வகையில், இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா முதன் முதலாக பரவிய சீனாவில் 3,245 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியில் அதைவிட கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில், 3 நாட்களுக்கு முன்பு சுமார் 35 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது சுமார் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments