வருமானமும் இல்லை.. பிழைப்பும் இல்லை... கொரோனாவின் தாண்டவம்..

0 4618

கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் , தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பாதிப்பின் வீரியம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு,...

தினந்தோறும் உழைத்தால் மட்டுமே வருமானம் என்ற நிலையில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா நோய்த் தொற்று பீதியால் மக்கள் நடமாட்டம் குறைந்து வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி காணப்படுகின்றது . இதன் காரணமாக பல கூலித் தொழிலாளிகளும் அமைப்புச்சாரா தொழிலாளர்களும் வருமானத்தை த்தை இழந்து தவிக்கின்றனர்.

அதே போன்று சொற்ப அளவிலேயே ஆட்டோவைத் தேடி பயணிகள் வருவதாகவும் , வருமானம் பலமடங்கு குறைந்து விட்டதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாகவே பூ விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாக கூறும் விஜயா வியாபாரத்திற்கு முதல் போட்ட பணத்தை திரும்ப எடுப்பதே சவலாக உள்ளதாக கூறுகிறார்.

பயணிகள் எண்ணிக்கை சரிந்துவிட்டதால் போதிய அளவிலான பணி கிடைப்பதில்லை என்கின்றனர் சென்ட்ரல் ரயில்நிலைய சுமைத்தூக்கம் தொழிலாளர்கள். சாலையோர வியாபாரிகள் , கால்டாக்சி ஓட்டுநர்கள் , பெட்டிக்கடை , தள்ளுவண்டி டிபன்கடை, போன்ற லட்சக்கணக்கான தினக்கூலி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இன்று கிடைக்கும் வருமானமே அடுத்தநாளின் பசிக்கு உணவாகும்.

எனவே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சரியான நேரம் இதுதான் என்கின்றனர் இந்த தொழிலாளர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments