தொற்றை வெல்வோம்-துணிவுடன் இருப்போம்

0 2456

கொரோனா தொற்று பரவும் ஆபத்து யார் யாருக்கு ஏற்படும், அப்படி தொற்று ஏற்படும் பட்சத்தில் என்னவென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய சிறு செய்தித் தொகுப்பு...

கொரோனா தொற்று பாதித்த நபர் இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் அல்லது தொற்று பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் பட்டவர்கள்  ஆகியோருக்கு தொற்று பரவும் வாய்ப்பு  உள்ளது.

கொரானா தொற்றிய நபருடன் விமானப் பயணம் செய்தவர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற கட்டங்களில் இருப்பவர்கள்  வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி  கழிவறை இணைந்த, நன்கு காற்றோட்டமுள்ள ஒற்றை அறையில் இருக்க வேண்டும்.

அதே பகுதி அல்லது அறையில் மற்றொரு குடும்ப உறுப்பினர் இருக்க நேரிட்டால் குறைந்தது 1 மீட்டர் தள்ளியே இருக்க வேண்டும் குழந்தைகள்,  முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.

வீட்டுக்குள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் விசேட, துக்க நிகழ்ச்சிகள், மதம்சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடுதல் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளக் கூடாது. பாதுகாப்பான, சுகாதாரமான பழக்கவழக்கங்கள், நடைமுறைகளை பின்பற்றினால் தொற்று தீவிரமடைவதை தடுத்து விட முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments