துபாயில் இருந்து வந்த பயணிகள் கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

0 45471

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த 143 பயணிகளில் பெரும்பாலானவர்கள் கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுத்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை கண்காணிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், உணவு, தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் பரிசோதனை என்கிற பெயரில் தங்களை நீண்ட நேரமாக காக்க வைத்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், எந்த சோதனையாக இருந்தாலும் விமான நிலையத்திலேயே செய்து முடித்துவிட்டு, தங்களை வீட்டுக்கு அனுப்புமாறு பயணிகள் கோரிக்கை வைத்தனர். பிறகு அதிகாரிகளின் சமாதானத்தின் பேரில் பயணிகளில் ஒரு பகுதியினர் கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments