கொரோனா வந்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்.! நாள்வாரியாக கூடும் அறிகுறிகள் ( Day 1 to Day 9 )

0 13034

கொரோனா வைரஸ் உலக மக்களை கொன்று குவித்து வரும் நிலையில், இந்த உயிர்கொல்லிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியுள்ளது. கொரோனா பீதி மக்களை ஆட்டுவித்து வரும் நிலையில், இந்த உயிர்கொல்லி தாக்கினால் ஏற்படும் அறிகுறிகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்.

கொரோனாவை பொறுத்த வரை சில சமயம் வெளிப்படையான அறிகுறிகளுடனும், சில சமயம் அறிகுறிகளே இல்லாமலும் உடலில் வலுவாக காலூன்ற கூடிய தன்மை உடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, கொரோனா தாக்கிய பின்னர் நாள் ஒன்று முதல் ஏற்படும் அறிகுறிகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

DAY 1-3

ஒரு நபரை கொரோனா தாக்கியிருந்தால் முதல் மூன்று நாட்களில் அவருக்கு சளிபிடிப்பதற்கான அறிகுறிகள், லேசான தொண்டை வலி காணப்படும். காய்ச்சல் இருக்காது மற்றும் சோர்வாகவும் உணர மாட்டார். பசியும் வழக்கம் போல இருக்கும். சாப்பாடு மற்றும் பானங்களை வழக்கம் போல உட்கொள்ள முடியும்.

DAY 4

கொரோனா தாக்கி மூன்று நாட்கள் கடந்திருந்தால் அதாவது நான்காம் நாளில் தொண்டை வலி சற்று அதிகரித்திருக்கும். குரல் வழக்கம் போல இல்லாமல் கரகரப்பாக மாறுகிறது. உடல் வெப்பநிலை கிட்டத்தட்ட 36.5 டிகிரி செல்சியஸ் (97.7 பாரன்ஹீட்) அளவிற்கு இருக்கும். வழக்கமான உணவுகளை சாப்பிடுவதில் சிறிது சிரமம் ஏற்படும். லேசான தலைவலியோ அல்லது லேசான வயிற்று போக்கோ ஏற்பட கூடும்.

DAY 5

கொரோனா தாக்கிய ஒருவருக்கு ஐந்தாவது நாளில் தொண்டை வலி முன்பை விட அதிகரித்திருக்கும். உடல் வெப்பம் சற்று ஏறி 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 36.7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். உடல் பலவீனமானதை போல உணர்வார்கள். கூடவே மூட்டு வலியும் சேர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAY 6

கொரோனா அட்டாக் ஆன ஆறாவது நாளில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் லேசாக காய்ச்சல் துவங்குகிறது. வறட்டு இருமல் ஏற்படும். உணவை விழுங்கும் போது அல்லது பேசும்போது தொண்டை வலியை நன்றாக உணர முடியும். குமட்டல் உணர்வு ஏற்படும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, சுவாசிப்பதில் அவ்வப்போது சிரமம் உண்டாகும். விரல்கள் வலி ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

DAY 7

கொரோனா தாக்கிய பின்னர் சரியாக ஒரு வாரம் கழித்து அதாவது ஏழாம் நாளில், பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ் முதல் 37.8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து தீவிர காய்ச்சல் அடிக்கும். கபத்துடன் கூடிய இடைவிடாத இருமல், உடல் மற்றும் தலைவலி அதிகரிப்பு, மோசமான வயிற்று போக்கு மற்றும் வாந்தி ஏற்படுகிறது.

DAY 8

எட்டாவது நாளில் 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் காய்ச்சல் அடிக்கும். சுவாசிக்கும் போது மார்பில் கனமான உணர்வு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இடைவிடாமல் கடுமையான இருமல், கடும் மூட்டுவலி மற்றும் உட்காரும் போதும், படுக்கும் போதும் பிட்டத்தில் வலி ஏற்படும்.

DAY 9

ஒன்பதாவது நாளில் இதுவரை பார்த்த அறிகுறிகளில் மாற்றம் இல்லாமல் இருக்கும். அதே சமயம் காய்ச்சல்,இருமல், சுவாசிப்பதில் சிரமம் என அனைத்து அறிகுறிகளும் தீவிரமடைந்திருக்கும். அனைத்து அறிகுறிகளும் தீவிரமடைந்திருந்தால் ரத்த பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா தன்னை தாக்கியிருக்க கூடும் என்று ஒருவர் கருதினால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகள் கேட்டு கொள்வதே சிறந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments