ராஜமவுலியின் RRR படத்தில் இருந்து ஆலியா பட் விலகல் ?

0 1743

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். (RRR) படத்திலிருந்து இந்தி நடிகை ஆலியா பட் (Alia Bhatt) விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலிக்கு பிறகு, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர். எனும் பெயரில் உருவாகும் புதிய படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். இதில் நடிக்கும் 2 கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாத்திரத்துக்கு ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், இம்மாதம் நடத்த முடிவு செய்யப்பட்ட படப்பிடிப்பு மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் வேறு சில படங்களுக்கு தேதிகளை ஆலியா பட் ஒதுக்கியிருப்பதாகவும், ஆதலால் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments