சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 5 வயது குழந்தை மீட்பு

0 770

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 5 வயது குழந்தை தெலங்கானா மாநிலத்தில் மீட்கப்பட்டது. அசாமை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கண் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார்.

அவர்கள் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பும் போது, சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் அவருடைய குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய  போலீசார் குழந்தையின் விபரம் மற்றும் புகைப்படத்தை அனைத்து ரயில்வே காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம், தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments