தங்கம் விலை உயர்வு..!

0 1522

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியால் கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று மீண்டும் உயர்ந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று 3,868 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 11 ரூபாய் உயர்ந்து 3,879 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 30 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 88 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 032 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே சமயம் பார் வெள்ளி ஒரு கிலோ நேற்றைக் காட்டிலும் 700 ரூபாய் விலை குறைந்து 38 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments