கொரோனா எதிரொலி-வருவாய் குறைவால் விமான நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கட்

0 689

கொரோனா தொற்றின் எதிரொலியாக பல சேவைகள் நிறுத்தப்பட்டு, வருவாய் குறைந்ததை அடுத்து மூத்த அதிகாரிகளுக்கான ஊதியம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இதைத் தெரிவித்த அதன் தலைமை செயல் அதிகாரி ரோனாஜாய் தத்தா (Ronojoy Dutta) தமது ஊதியத்தையும் 25 சதவிகிதம் என்ற அளவிற்கு குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

விமானிகளுக்கு 15 சதவிகிதமும் இதர பணியாளர்களுக்கு 5 முதல் 10 சதவிகிதமும் ஊதியம் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச சேவைகள் பலவற்றை வரும் 21 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments