ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்

0 5867

ஒரே தேசம் - ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று உணவு அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இத்திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், இனி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மின்னணு குடும்ப அட்டைகள் இல்லாத குடும்பங்களும் இனி, ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments