கொரோனாவால் பாதித்த 4 பேர் தப்பியோட்டம் - ரயிலில் பயணித்த போது மக்களால் கீழே இறக்கிவிடப்பட்ட சம்மவம்

0 11104

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய 4 பேர், மும்பை-டெல்லி ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு கீழிறக்கி விடப்பட்டனர்.

மும்பையில் இருந்து டெல்லி காரீப் ரத ரயில் புறப்பட்டபோது, அதிலிருந்த பயணிகள், சக பயணிகள் 4 பேரின் கைகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பால்கர் எனுமிடத்தில் ரயில்  நிறுத்தப்பட்டு 4 பேரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் பால்கர் மருத்துவ குழுவினர் கட்டுப்பாட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments