கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - சீனா

0 2492

கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என சீனா அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் அதன் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக சீனா நடத்தி வரும் போரில் இது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது பூஜ்யம் என்ற நிலைக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும், அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நேற்று இரவு வரை, 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இந்த 34 பேருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments