கொரோனா எதிரொலி - ரயில்வே துறைக்கு 454 கோடி ரூபாய் இழப்பு

0 1166

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ரயில்வே துறைக்கு 454 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டித் திட்டமிட்டிருந்த பயணங்களைப் பொதுமக்கள் ரத்து செய்து விட்டனர். போதிய பயணிகள் இல்லாததால் செவ்வாயன்று 85 ரயில்களும், புதனன்று 99 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 45 விழுக்காடு சரிந்துள்ளது. பயணச்சீட்டு ரத்து செய்வது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 80 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு 454 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மார்ச் 20 முதல் 31வரை பல்வேறு மண்டலங்களில் 168 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில்வேக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments