கர்ப்பிணி காதலிக்கு சுயபிரசவம் ? குழந்தை பலி - காதலன் கைது

0 5376

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவிக்கு அவரது காதலனே சுய பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பொன்னேரி அரசுக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் சவுந்தர் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சவுந்தரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமடைந்து, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த விவகாரம் அப்பெண்ணின் தாயாருக்கு ஏற்கனவே தெரிந்த நிலையில், நேற்றிரவு மாவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சவுந்தர் அங்குச் சென்று கர்ப்பிணி காதலியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் விவகாரம் வெளிச்சத்திற்கு வரும் என அஞ்சிய அவர், அருகில் உள்ள தைலமரத்தோட்டத்தில் வைத்து மாணவிக்கு சுய பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தையின் கை மட்டும் வெளியே வந்த நிலையில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் பதற்றம் அடைந்த சவுந்தர், மாணவியின் தாயாரை வரவழைத்து சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதித்துள்ளார். அங்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், சுய பிரசவம் செய்த குற்றத்திற்காக சவுந்தரை கைது செய்ததுடன், மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments