ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் vs குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்

0 664

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 3ம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அமெரிக்க மாகாணங்களில் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும், செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. புளோரிடா, இல்லினாய்ஸ், அரிசோனா ஆகிய 3 மாகாணங்களில் நேற்று முன்தினம் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 3 மாகாணங்களிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments