திருப்பூரில் கொடூர சாலை விபத்து : கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

0 3824

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிமெண்ட் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தில் உள்ள விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், விடுமுறையையொட்டி உதகைக்கு சுற்றுலாச் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அதிவேகத்தில் இயக்கப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்ற சிமெண்ட் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த ஐந்து கல்லூரி மாணவர்களும் கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர். அதிகாலை நேரத்தில் கார் ஓட்டுநர் கண் அயர்ந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments