மலேசியாவில் சிக்கித் தவித்த மாணவர்கள் இந்தியா வந்து சேர்ந்தனர்

0 939

பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்டு மலேசியாவில் சிக்கித் தவித்த 150 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 185 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக பிலிப்பைன்சில் கல்லூரிகள் மூடப்பட்டதால்  திங்கட்கிழமை இரவு 185 பேரும் இந்தியாவுக்கு புறப்பட்டனர். ஆனால், இந்தியா விதித்த தடையால் அவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே இறக்கி விடப்பட்டனர்.

தகவலறிந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மலேசியாவில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள் மீட்கப்படுவர் என உறுதியளித்தார். இந்நிலையில், 185 பேரும் ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments