கொரோனாவுக்கு மதம் பிடித்தால்...! இதெல்லாம் பாவம் மை சன்..

0 7647

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா குரளிவித்தைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன

கொரோனா பரவுதலை தடுக்க பெருங்கூட்டமாக கூடுதலை தவிர்ப்போம் என்று மத்திய- மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், சில போதகர்கள் கொரோனாவை விரட்ட தாம்பரம், திருக்கோவிலூரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக மூன்று வாரங்களுக்கு முன்பே இயேசு விடுவிக்கிறார் தலைமை போதகர் மோகன்சி லாசரஸ் ஜெபத்தினால் மட்டுமே கொரோனா போன்ற கொள்ளை நோய்களை விரட்டமுடியும் என்று அறிவித்துவிட்டார்

இவர்கள் ஒருபக்கம் கொரோனாவை விரட்ட ஜெபத்துடன் ஒன்று கூடிவரும் நிலையில், இவர்களுக்கு சற்றும் குறையாத புத்திசாலிதனத்தோடு புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வாசுதேவன் மற்றும் அய்யப்பன் குருக்கள் கொரோனாவை எதிர்த்து கிரக பிரீதி ஹோமம் செய்ய உள்ளதாக கூறி கலகலப்பூட்டினர்.

குறிப்பாக சனியும், செவ்வாயும் கூடியதால் தான் கொரோனா வைரஸ் கிருமி உருவானதாக ..., தாங்கள் கண்டறிந்த ரகசியத்தையும் சிரிக்காமல் தெரிவித்தனர்..!

இந்த கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக ஹோமம் செய்யப்போவதாக கூறிய குருக்களிடம் ஹோமத்தால் உண்டாகும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுமே என்று கேள்வி எழுப்பபட்டது.

ஹோம புகையில் சிக்கி கொரோனா கிருமி அழிந்து விடும் என்று விளக்கம் அளித்து அசர வைத்தனர்..!

ஒரு பக்கம் கொரோனாவை அழிப்பதாக கூறி குரளிவித்தைகள் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்க, மக்களின் நலனில் அக்கறை உள்ள சில மருத்துவர்கள் மக்களை அச்சுறுத்தாமல் , எளிதாக மேற்கொள்ளக்கூடிய சில முன் எச்சரிக்கை டிப்ஸ்களை வழங்கி வருவது சற்று ஆறுதலாக உள்ளது.

நோய் வந்த பின், பாவம் மை சன் ..! என்று நொந்து கொள்வதைவிட , வரும் முன் எச்சரிக்கையுடன் இருந்து தற்காத்துக் கொள்வதே சால சிறந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments