இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி...

0 3659

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய்த் தொற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்தது. மேலும் மக்கள் கூடும் இடங்களான பூங்காக்கள், திரையரங்குகள், மைதானங்கள், பொழுது போக்கு மையங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் என பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசத்தை வலுப்படுத்துவதற்கான நேற்று பிரதமர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் தொற்று நோய் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைத் தீர்ப்பதில் தனிநபர்கள், உள்ளூர் அமைப்புகள் ஈடுபடவேண்டும் என கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் முனைப்புக் காட்டி வரும் மாநில அரசுகள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments