தெலங்கானா, உ.பி., ஹரியானாவில் புதிதாக மூவருக்கு 'கொரோனா' உறுதி

0 814

தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனைவியுடன் இந்தோனேஷியா சென்று திரும்பிய நொய்டாவைச் சேர்ந்தவர் 5 நாட்களுக்குப் பின் பாதிப்பு அறிகுறிகளுடன் தனிமைவார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவியின் உடற்கூறு மாதிரிகளையும் அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அதே போன்று லண்டன் சென்று திரும்பிய ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்தவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்களில் இருவரின் உடற்கூறு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் 6-வது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் சென்று திரும்பிய அவர், பாதிப்பு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments