பரவும் கொரோனா.. சராசரியாக 1 மணி நேரத்தில் மனிதன் எத்தனை முறை முகத்தை தொடுகிறான்..!

0 4174

உயிர்கொல்லியான கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று நோயாக பரவி வரும் கொரோனவால் மக்கள் தங்களது அன்றாட பழக்க வழக்கங்கள் குறித்து அதிகம் யோசிக்கிறாரகள். அதிக அக்கறையுடன் இருக்கிறார்கள். 

social distancing எனப்படும் சமூக விலகல் நடவடிக்கைகள், மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதே தொற்று நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள சிறந்த வழியாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள Rocky Mountain Laboratories மனித உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் கொரோனா வைரஸின் பண்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில், சில பொருட்களின் மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் தொற்று உயிர் வாழும் என தெரிய வந்துள்ளது.

அதன்படி cardboard எனப்படும் அட்டைகள் மீது 24 மணி நேரம் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் stainless steel மீது 3 நாட்கள் வரையிலும் கொரோனா உயிர் வாழும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

image

அதே போல காற்றில் 3 மணிநேரம் வரை கொரோனா உயிரோடு இருக்குமாம். காப்பர் பொருட்களின் பரப்பு மீது 4 மணி நேரமும், பாலி புரோப்பிலீன் எனப்படும் plastic வகையின் மீது 16 மணி நேரமும் கொரோனா உயிர்ப்புடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக வைரஸ் பரவுவதற்கான பொதுவான வழி நீர்த்துளிகள் வழியாகும்.யாரேனும் இருமும்போது அல்லது தும்மும்போது வெளியேறும் நீர்த்துளிகள் 6 அடி வரை பயணிக்கும். ஏதேனும் பொருளின் மேற்பரப்பின் மீது படும் அந்த நீர்த்துளிகளில் உள்ள வைரஸ், பெரும்பாலும் முதல் 10 நிமிடங்கள் முதல் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதவு கைப்பிடிகள் முதல் ரூபாய் நோட்டுகள் வரை வைரஸ் தொற்று இருக்க கூடும் என்று நினைக்கும் சந்தேகத்திற்கிடமான மேற்பரப்புகளைத் தொடுவதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வது மற்றும் தவறாமல் கைகளைக் கழுவுவது முக்கியம்.

பெரும்பாலான நோய்த்தொற்றுகள் பெரிய வைரஸ் துகள்களால் தான் ஏற்படுகின்றன. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உடைத்து தொற்றுநோயை ஏற்படுத்த பல்லாயிரக்கணக்கான வைரஸ் துகள்கள் தேவை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். வைரஸ் கொண்ட மேற்பரப்புகளை தொட்ட பிறகு, முகத்தைத் தொடுவது தொற்றுநோய் எளிதாக தாக்க வழிவகுக்கும்.

மக்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக 20 முறைக்கும் மேல் தங்கள் முகத்தைத் தொடுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதிலும் தாடி, மீசை வைத்திருப்பவர்கள் இன்னும் அதிகமாகவே தங்களது முகத்தை தொடுவதாக கூறப்பட்டுள்ளது.

image

ஆய்வின் படி சராசரியாக ஒரு மணி நேரத்தில், 1 - 23 நொடிகளுக்குள் கழுத்தை 1 முறையும், 1- 10 நொடிகளுக்குள் தாடையை 4 முறையும், 1- 12 நொடிகளுக்குள் வாய் பகுதியை 4 முறையும், 1- 12 நொடிகளுக்குள் கன்னங்களை 4 முறையும், 1- 10 வினாடிகளுக்குள் மூக்கை மூன்று முறையும், 1 - 53 நொடிக்குள் கண்களை மூன்று முறையும், 1 - 10 நொடிக்குள் முடியை 4 முறையும், 1 - 20 நொடிக்குள் காதுகளை 1 முறை என தொடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வைரஸ்கள் உயிர் வாழ மற்றொரு உயிரினம் தேவை. அது போல சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து ஒருவர் மீண்டாலும், 8 முதல் 37 நாட்கள் வரை அவரது உடலில் கொரோனா தங்கியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments