கொரோனா பரவலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

0 3474

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், அதன் ஆபத்திலிருந்து தப்பிக்கவும், சுயக் கட்டுப்பாடும், தனிமனித சுகாதாரமும் முக்கியம் என மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டே, கூட்டமாக கூடுவதையும், நெருக்கமாக நின்று பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், அதிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகளவில் இந்தியா 2ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியதோடு, மாநில அரசுகளோடு இணைந்து, உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பல்வேறு நாடுகளும் பாராட்டுகள் தெரிவித்துள்ளன.

முன்கூட்டியே எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மூலமே, கொரோனா பரவுதலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு, மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தனிமனிதர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இந்த வகையில், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க, கூட்டமாக கூடுவதையும், நெருக்கமாக நின்று பேசுவதையும், தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதை மீறி, கூட்டமாக கூடினால், அதில் கொரோனா பாதித்த ஒருவர் இருந்தாலும், ஏராளமானோருக்கு பரவும் ஆபத்து உள்ளதாக, மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரிக்கிறது.

இவ்வாறான, கொரோனா குறித்த விழிப்புணர்வு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவுகளை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்கொண்டுள்ளன. போதிய விழிப்புணர்வு இல்லாததால், கொரோனாவிலிருந்து தப்ப இயலாமல் திணறி வருகின்றன. கொரோனோ முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், குறைந்த கால கட்டத்தில், இத்தாலியில் கொரோனா பரவி, கொத்து, கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன.

அதுபோன்ற துயரம், தமிழ்நாட்டில் தலைகாட்டிடாத வண்ணம், மாநில அரசு, கொரோனா தடுப்புக்கான பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதேவேளையில், மத்திய, மாநில அரசுகள் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தனி மனித சுகாதாரமும், சுயக்கட்டுப்பாடும், ஒத்துழைப்பு அவசியம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

எனவே தான் தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, ஊர்வலம், பேரணி, கருத்தரங்குகள், முகாம்கள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..

இதனையடுத்தே, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாகவும், தங்களால், அடுத்தவர்களுக்கு கொரோனா வந்துவிடக் கூடாது என்ற உறுதிப்பாட்டினாலும், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோள்களையும் ஏற்று, இஸ்லாமிய கூட்டமைப்பினர், சிஏஏ.க்கு எதிரான தங்கள் போராட்டங்களை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், கடலூர், விருதுநகர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், சிஏஏ.க்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments