செந்தில் பாலாஜி மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்

0 1478

உடலில் உயிரும் உதிரமும் உள்ளவரை ரஜினிக்கு ஆதரவு என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில்,பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை வெகுவாக குறை கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எம். ஆர். விஜய பாஸ்கர், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது, தன் உடலில் உயிரும் உதிரமும் உள்ளவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என பேசியிருந்ததை சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர், டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி, தற்போது, மு.க. ஸ்டாலின் பக்கம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில்பாலாஜி செல்வார் என விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments