யூரோ கால்பந்து கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

0 1714

ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு, அதிக அளவு ரசிகர்கள் காணும் போட்டியாக யூரோ கோப்பை கால்பந்து போட்டி திகழ்கிறது. ஐரோப்பா கண்டத்திலுள்ள 12 நாடுகளில் இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை அப்போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவி வருவதை சுட்டிக்காட்டி, அந்த போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments