இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

0 3232

கொரோனா வைரஸுக்கு மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 152-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 137 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்து 2ஆவது அதிகபட்ச எண்ணிக்கையாக கேரளாவில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 16 பேரும், கர்நாடகாவில் 13 பேரும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 56 வயது நபருக்கும், ஸ்பெயினில் இருந்து திரும்பிய 26 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா உறுதியானதால், அவர்கள் மருத்துவமனைகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments