பங்குச்சந்தையில் தொடரும் வீழ்ச்சி

0 588

கொரோனா பரவலின் தாக்கத்தால் 3 ஆண்டுகளில் முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 29 ஆயிரம் என்கிற வரம்புக்குக் கீழ் சென்றது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தொழில், வணிகத் துறைகளில் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பு கடந்த 3 வாரக்காலமாக இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து 709 புள்ளிகள் சரிந்து 28 ஆயிரத்து 869 ஆக இருந்தது.

2017 ஜனவரிக்குப் பின் சென்செக்ஸ் 29ஆயிரம் என்கிற வரம்புக்குக் கீழ் சென்றது இதுவே முதன்முறையாகும். தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 498 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 469 ஆக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகள் 10 விழுக்காடு முதல் 24 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments