ஈரானில் உள்ள இந்தியர்கள் 254 பேருக்கு கொரோனா

0 2258

ஈரானில் உள்ள இந்தியர்களில் 250க்கும்  மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த எண்ணூறு பேர் ஈரான் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றனர். கொரோனா பரவல் எதிரொலியால் அவர்கள் கோம் என்னுமிடத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அந்தப் பகுதி ஈரானில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

அங்குள்ள இந்தியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காகப் புனேயில் இருந்து மருத்துவர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 254 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வெளியுறவுச் செயலரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments