நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் BSNL மூடப்படுகிறதா..?

0 15868

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  மக்களவையில் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள போட்டி, கட்டண சரிவு உள்ளிட்ட காரணங்களால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம்  நெருக்கடியில் உள்ளது.

இதனிடையே சுய விருப்ப ஓய்வு திட்டம்  மூலம் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 55,296 ஊழியர்களில், 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்தனர். 

இதனால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடலாம் அல்லது தனியார்வசம் ஒப்படைக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments