கொரோனா: கூடுதலாக ரூ 1,05,000 கோடியை ஒதுக்கியது உலக வங்கி

0 389

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய உலக வங்கி மேலும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

கொரோனா தொற்றை தொடர்ந்து முதற்கட்டமாக  15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய உலக வங்கி இப்போது அதன் தொற்று 120 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சர்வதேச பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுளது.

இதை அடுத்து வளர்ந்து வரும் நாடுகள், தொழில் அமைப்புகள் ஆகியவற்றுக்கு அவசர கதியில் உதவுவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் ((David Malpass)) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments