கொரோனாவால் பொருளாதார பாதிப்பு ஏதும் இல்லை - மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்

0 434

கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் இது வரை எந்த மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதைத் தெரிவித்த அவர், கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகத்துறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயுமாறு ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் மற்றும் வர்த்தக சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

சீன இறக்குமதியை நம்பியுள்ள மருந்து தயாரிப்பு, மின்னணுப் பொருள்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments