கொரோனாவால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..? சென்னை மாநகராட்சி விளக்கம்

0 1601

கொரோனாவால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான காய்கறிக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் சந்தைகள், சிறு, குறு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அவை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அது குற்றமாக கருதப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments